சிங்கப்பூரில் 300,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு கண் பராமரிப்பு திட்டம்..!

(Photo: TODAY)

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் வசித்துவரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு கண் பராமரிப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதில் சுமார் 300,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு, இலவச கண் பார்வை தொடர்பான கல்வி மற்றும் தேவையானவர்களுக்கு வாசிப்புக் கண்ணாடிகளும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் தீமிதித் திருவிழா 2020: நேரடி ஒளிபரப்பு.

கண்பார்வை பராமரிப்பு திட்டம்

கண் மருத்துவ நிறுவனமான Essilor கடந்த வெள்ளிக்கிழமை (அக். 30) கண்பார்வை பராமரிப்பு திட்டத்தை தொடங்கியுள்ளது.

வெளிநாட்டு ஊழியர் நிலையத்துடன் இணைந்து, Essilorஇன் Essilor விஷன் அறக்கட்டளையின் கீழ் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம், தெளிவான பார்வையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மூன்று ஆண்டுகள் வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கிட்டப்பார்வை குறைப்பாடு

40 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய வெளிநாட்டு ஊழியர்கள், கிட்டப்பார்வை குறைப்பாடு காரணமாக பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இதன் தொடக்க நிகழ்வில், சிறப்பு விருந்தினராக மனிதவள அமைச்சர் ஜோசபின் தியோ கலந்துகொண்டார்.

குறிப்பிட்ட நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமானங்களின் கட்டணங்கள் உயர்வு.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…