சிங்கப்பூரில் மூடப்படவுள்ள ராபின்சன்ஸ் கடைகளில் தள்ளுபடி விற்பனை..!

Robinsons closing down sale
Photo: Ooi Boon Keong/TODAY

சிங்கப்பூரில் கடந்த சுமார் 162 ஆண்டுகளாக வர்த்தகம் செய்து வந்த ராபின்சன்ஸ் சில்லறை விற்பனைக் குழுமம் ஆர்ச்சர்ட் சாலை, ராஃபிள்ஸ் சிட்டி ஆகிய வட்டாரங்களில் உள்ள தனது கடைசி இரண்டு கடைகளையும் மூடுவதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், ஆர்ச்சர்ட் சாலை, ராஃபிள்ஸ் சிட்டி ஆகிய வட்டாரங்களில் உள்ள தனது கடைசி இரண்டு கடைகளில் தள்ளுபடி விற்பனையை ராபின்சன்ஸ் அறிவித்துள்ளது.

தமிழகம் – சிங்கப்பூர் செல்லும் விமானங்களின் கட்டணம்..!

ஆடைகள், அழகுப் பராமரிப்பு, வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்துப் பொருள்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தள்ளுபடி விலை, புத்தம் புதிய பொருள்களுக்கும் பொருந்தும் என்றும், இருப்பில் உள்ள பொருள்கள் தீரும் வரை கடைகள் தொடர்ந்து செயல்படும் என்றும் ராபின்சன்ஸ் தெரிவித்துள்ளது.

தள்ளுபடி விலை அறிவிக்கப்பட்டதையடுத்து, ஆர்ச்சர்ட் சாலை, ராஃபிள்ஸ் சிட்டி ஆகிய வட்டாரங்களில் உள்ள கடைகளில் பொருள்களை வாங்க கடைக்கு வெளியே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

ராபின்சன் மூடல் எதிரொலி: வாடிக்கையாளர்கள் புகார்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…