ராபின்சன் மூடல் எதிரொலி: வாடிக்கையாளர்கள் புகார்..!

Robinsons customers are reporting delays
Robinsons customers are reporting delays (PHOTO: Robinsons)

சில ராபின்சன் வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கிய பொருட்களை வழங்குவதில் ஏற்பட்ட தாமதங்கள் அல்லது ரத்துசெய்தல் தொடர்பாக புகார் செய்துள்ளனர்.

ஏனெனில், ராபின்சன் தனது கிளைகளை மூடவிருப்பதாக அறிவித்ததை அடுத்து அவர்கள் தங்களது தொகைகளை திரும்ப பெறுவதற்கு காத்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் மேலும் எட்டு புதிய வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள்.

இதில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் மன கவலை மற்றும் அவர்களின் பதட்டத்தை ராபின்சன் நிறுவனம் ஒப்புக் கொண்டது.

ராபின்சனில் இருந்து வாங்கப்பட்ட மெத்தை விநியோகிக்கப்படவில்லை என்று அவர்கள் புகார் அளித்துள்ளனர்.

ராபின்சன் நேற்று (நவம்பர் 1) பேஸ்புக் பதிவில், மெத்தை தொடர்பான விவகாரம் கவனிக்கப்பட வேண்டிய முன்னுரிமை பிரச்சினை என்று குறிப்பிட்டுள்ளது.

வாடிக்கையாளர்களை எதிர்மறையாக பாதிக்கும் தற்போதைய சூழலை சரிசெய்ய, அவசர சந்திப்புகளை திட்டமிட்டுள்ளதாகவும் அது கூறியுள்ளது.

சிங்கப்பூரில் கடந்த சுமார் 162 ஆண்டுகளாக வர்த்தகம் செய்து வந்த ராபின்சன்ஸ் சில்லறை விற்பனைக் குழுமம் ஆர்ச்சர்ட் சாலை, ராஃபிள்ஸ் சிட்டி ஆகிய வட்டாரங்களில் உள்ள தனது கடைசி இரண்டு கடைகளையும் மூடுவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் 300,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு கண் பராமரிப்பு திட்டம்.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…