சிங்கப்பூரில் மேலும் எட்டு புதிய வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள்..!

migrant workers Quick Build Dormitories
(Photo: Suhaimi Abdullah/ Getty Images)

சிங்கப்பூரில் அடுத்த ஆண்டின் இரண்டாம் பாதியில், மேலும் எட்டு தங்கும் விடுதிகள் விரைவாக கட்டிமுடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த விடுதிகளில் மொத்தம் 25,000 ஊழியர்கள் வரை வசிக்க முடியும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சகம் தெரிவித்துள்ளது

சிங்கப்பூர் கொரோனா: தற்போதைய நிலவரம் என்ன?

கட்டிமுடிக்கப்பட்ட விடுதிகள்

சமீபத்தில், கிரான்ஜி (Kranji), அட்மிரால்டி (Admiralty) மற்றும் சுவா சூ காங் (Choa Chu Kang) ஆகிய இடங்களில் விரைவாக கட்டிமுடிக்கப்பட்ட விடுதிகள் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு செயல்படத் தொடங்கின என்பது கூடுதல் தகவல்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் வாழ்க்கைத் தரத்தை கூடுதலாக மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளில் இந்த நடவடிக்கைகள் ஒரு பகுதியாகும்.

கிருமித்தொற்றின் தாக்கம்

சிங்கப்பூரில் கிருமித்தொற்றின் தாக்கத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள்.

தற்போது ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் தொற்று பாதிப்பு இல்லை என்றாலும், அரசாங்கம் வெளிநாட்டு ஊழியர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சிங்கப்பூரில் 300,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு கண் பராமரிப்பு திட்டம்.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…