சிங்கப்பூரில் சுமார் 400,000 குடும்பங்களுக்கு S$20 மில்லியன் வவுச்சர்கள் விநியோகிக்கப்படும்..!

stallholders-heartland-coffeeshop quits-due-high-rents
S$20 million in vouchers to be distributed to 400,000 households (Photo: The Straits Times file)

சுமார் 400,000 சிங்கப்பூர் குடும்பங்கள் அல்லது சிங்கப்பூர் குடும்பங்களில் சுமார் 30 சதவீதம் குடும்பங்களுக்கு, விரைவில் வவுச்சர்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது அந்த வவுச்சர்களை 2,000க்கும் மேற்பட்ட அக்கம்பக்கம் கடைகள் மற்றும் உணவங்காடி நிலையங்களிலும் பயன்படுத்தலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக COVID-19 தொற்று பாதித்தவர்கள் சென்று வந்த மேலும் 3 இடங்கள் வெளியீடு..!

S$20 மில்லியன் சமூக மேம்பாட்டு மன்றம் (CDC) வவுச்சர்கள் திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் S$2 மதிப்பிலான சுமார் S$50 மதிப்புள்ள வவுச்சர்கள் கிடைக்கும் என்று மக்கள் சங்கம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இந்த CDC வவுச்சர்கள் திட்டத்தை துணை பிரதமர் ஹெங் சுவீ கியெட் மற்றும் சிங்கப்பூரில் உள்ள ஐந்து வட்டாரங்களின் மேயர்கள் வெள்ளிக்கிழமை தொடங்கினர்.

வரும் ஜூன் 25 முதல் டிசம்பர் 31 வரை இந்த வவுச்சர்களைப் பயன்படுத்தலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரியில் திரு ஹெங்கின் பட்ஜெட் உரையை தொடர்ந்து இந்த திட்டம் வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த வவுச்சர் திட்டத்தில் பங்குபெறும் கடைகளில் அதனை கொடுத்து உணவு, அத்தியாவசியப் பொருள்கள் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் முழுவதும் 2,500 வணிகர்கள் மற்றும் உணவு நிலையங்கள் இதில் பங்கேற்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் டிஜிட்டல் வளர்ச்சி மையத்தை தொடங்க உள்ள டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS)..!