சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு S$300,000 அதிகமான நிதி திரட்டு..!

PHOTO: Today

சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் – SINDA, வெளிநாட்டு ஊழியர்களுக்கு சுமார் S$300,000 அதிகமான நிதியைத் திரட்டியுள்ளதாக “செய்தி” குறிப்பிட்டுள்ளது.

அதாவது இந்த கிருமித்தொற்று காரணமாக பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களுக்கு உதவிபுரிய பல்வேறு அமைப்புகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன, அதில் இந்த முயற்சியும் ஒன்று ஆகும்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் தொற்று குறைந்தாலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடரும்..!

இந்திய வர்த்தக தலைவர்கள் அமைப்பு, CII இந்திய வர்த்தக சம்மேளனம் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடம் இருந்து இந்த நிதி திரட்டப்பட்டுள்ளது, அதாவது சுமார் S$326,000க்கும் அதிகமாக SINDA திரட்டியுள்ளது.

அந்த தொகையை வெளிநாட்டு ஊழியர் நிலையத்துக்கு, SINDA நேற்று வழங்கியதாக செய்தி தெரிவித்துள்ளது. இந்த நிதியானது, ஊழியர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்ய பயன்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு, வெளிநாட்டு ஊழியர்களின் பங்கு பெரிய அளவு என்று SINDA தலைவர் இந்திராணி ராஜா தெரிவித்துள்ளார். மேலும், இந்த கட்டான காலக்கட்டத்தில் அவர்களின் நிலையை சமாளிப்பதற்கு, சமூகமாக நாம் உதவ கடமைப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதில் #SINDACares இயக்கம், தனிநபர்கள், வர்த்தகர்கள் எனப் பலத் தரப்பினரை ஒருங்கிணைக்க உதவுவதாகவும், இதுபோன்ற முயற்சிகள் சமூக ஒற்றுமையை வலுப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க : வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் பல நிலை அணுகுமுறை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…