வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் பல நிலை அணுகுமுறை..!

'Multi-layered' strategy in migrant worker dormitories
(Roslan Rahman / AFP/Getty Images)

சிங்கப்பூரில் பெரிய COVID-19 குழுமங்கள் பரவுவதைத் தடுப்பதற்காக வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் பாதுகாப்பான வாழ்க்கை, பாதுகாப்பான வேலை மற்றும் பாதுகாப்பான ஓய்வு நாள் நடவடிக்கைகளை மனிதவள அமைச்சு (MOM) செயல்படுத்தியுள்ளது என்று மனிதவள இரண்டாம் அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்துள்ளார்.

தங்கும் விடுதியில் உள்ள குடியிருப்பாளர்கள் பலர் இந்த தொற்று நோயால் பாதிக்கப்படவில்லை என்றும், ஆனால் வைரஸால் பாதிக்கப்படும் சாத்தியம் உள்ளது என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க : இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு புதிய நடைமுறை..!

மிக விரைவாகவும், தீர்க்கமாகவும் எந்தவொரு புதிய தொற்றுநோய்களை கண்டறிவதற்கும், பல நிலை அணுமுறையை வகுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வெளிப்படையாக சொல்லப்போனால், நோய்க்கு முன்னர் கட்டுப்படுத்துவதே முக்கியம், எனவே பாதுகாப்பான வாழ்க்கை, பாதுகாப்பான வேலை, பாதுகாப்பான ஓய்வு நாட்கள் ஆகியவற்றை வகுத்துள்ளதாகவும் டான் பல அமைச்சக பணிக்குழு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இந்த நடவடிக்கைகள், தங்கும் விடுதிகளிலும், வேலை இடங்களிலும் ஊழியர்கள் ஒன்றிணைவதைக் கட்டுப்படுத்தும்.

மேலும், உடல்நிலை சரியில்லாத ஊழியர்கள் விரைவாக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவதையும் உறுதிசெய்யும், மேலும் இது பெரிய நோய்ப்பரவலை தடுக்க உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம் ஆகஸ்ட் 11ஆம் தேதி அன்று அனைத்து தங்கும் விடுதிகளிலும் கிருமித்தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்டன. ஆனால் அதன் பின்னர், தினமும் சுமார் 45 புதிய நோய்த்தொற்றுகள் விடுதிகளில் ஏற்படுவதாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள குளத்தில் சடலம் கண்டெடுப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…