இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு புதிய நடைமுறை..!

Pre-departure COVID-19 tests to be required for travellers from India
(PHOTO: The week)

இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வரும் பயணிகள், அதாவது சிங்கப்பூர்வாசிகள் அல்லது நிரந்தரவாசிகள் அல்லாதவர்கள் சிங்கப்பூர் புறப்படுவதற்கு முன்பு COVID-19 சோதனை கட்டாயம் எடுக்க வேண்டும்.

COVID-19 தொடர்பான அமைச்சக பணிக்குழு (COVID-19 multi-ministry task force) இன்று (செப்டம்பர் 9) இதனைத் தெரிவித்தது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள குளத்தில் சடலம் கண்டெடுப்பு..!

அண்மையில் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் பயணிகளின் தொற்றுச் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்து வரும் சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் அல்லாதோர், பயணம் மேற்கொள்வதற்கு 72 மணிநேரம் முன்பாகப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருமித்தொற்று இல்லை என்ற சோதனை முடிவை சமர்ப்பித்த பின்னரே, அவர்கள் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரும் செப்டம்பர் 17 நள்ளிரவு முதல் சிங்கப்பூருக்கு வருபவர்களுக்கு இந்தத் நடைமுறை பொருந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் ஒரு வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் நோய்ப்பரவல்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…