சிங்கப்பூரில் தொற்று குறைந்தாலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடரும்..!

russia-names-singapore-list-unfriendly
(PHOTO: Travel with Jane)

சிங்கப்பூரில் சமூக அளவில் ஏற்படும் தொற்று பாதிப்பு குறைவாக இருந்தாலும், கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடரும் என்று கிருமித்தொற்று அமைச்சுகளுக்கிடையிலான பணிக்குழு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் மட்டும் அல்லாது, வெளிநாட்டிலும் உள்ள நோய்த்தொற்று நிலவரத்தை அணுக்கமாய்க் கண்காணிப்பதாக பணிக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் பல நிலை அணுகுமுறை..!

இதில் குறிப்பாக Trace Together மற்றும் Safe Entry ஆகிய நடவடிக்கைகள் கூடுதலாக மேம்படுத்தப்படும் என்றும், நடப்பில் உள்ள எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் சூழநிலைகளை கையாளுதல் மற்றும் மீண்டும் பொருளாதார நடவடிக்கைகளை தொடங்குதல் ஆகியவை உறுதிசெய்ய உத்திகள் வகுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயதில் மூத்தோருக்கான சமூக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்றும், அது குறிப்பிட்டுள்ளது.

தனிநபர் மற்றும் வர்த்தகங்கள் ஆகிய அனைவரும் சிங்கப்பூரைப் பாதுகாப்பாக வைத்திருக்க தங்கள் பங்கையாற்ற வேண்டும் என்று பணிக்குழு வலியுறுத்தியுள்ளது.

இதில் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுதல், மேலும் விழிப்புடன் இருப்பது குறித்தும் அது குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில் 3ஆம் கட்ட நடவடிக்கைகள் தொடங்கும் வரை, சூழலை தொடர்ந்து கண்காணிக்க உள்ளதாகவும் பணிக்குழு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு புதிய நடைமுறை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…