சிங்கப்பூரில் 2,700க்கும் மேற்பட்ட இடங்களில் புதிய சேஃப்என்ட்ரி அமைப்புகள்

(PHOTO: TODAY)

அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களைக் கொண்ட இடங்களில் பாதுகாப்பான நுழைவாயில் (சேஃப்என்ட்ரி கேட்வே) சாதனங்களின் பயன்பாடு கடந்த திங்கட்கிழமை முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

புதிய சேஃப்என்ட்ரி அமைப்பானது மால்கள், திரை­ய­ரங்­கு­கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற 2,700க்கு அதிகமான இடங்களில் பொறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் உற்பத்தியான மின்சார மோட்டார் சைக்கிள்களை SMRT நிறுவனம் விநியோகிக்க ஒப்பந்தம்

வாடிக்கையாளர்கள் தங்களின் ட்ரேஸ் டுகெதர் டோக்கன் அல்லது ட்ரேஸ் டுகெதர் பயன்பாட்டுடன் தொலைப்பேசி மூலம் அந்த சாதனங்களில் வருகையை பதிவு செய்து கொள்ளலாம்.

கூட்டம் அதிகமாக உள்ள தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட இடங்­களில் ‘சேஃப்என்ட்ரி கேட்வே பாக்ஸ்’ அல்லது ‘சேஃப்என்ட்ரி’ செயலியை மூலம் ஏப்ரல் 19 முதல் நுழைவுகளை பதிவு செய்ய வேண்டும் என்று ­SNDGO தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள பாதுகாப்பு சோதனை முறைகள் QR குறியீடுகளை பயன்படுத்தியோ அல்லது பார்வையாளரின் NRICஐப் பயன்படுத்தியோ பதிவுகள் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.

பார்வையாளர்கள் தங்களின் கைபேசி மூலம் சேஃப்என்ட்ரி செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் சேஃப்என்ட்ரி கேட்வே சம்பந்தமான கூடுதல் விவரங்களுக்கு சேஃப்என்ட்ரி இணையப்பக்கத்தை சென்று காணலாம் என்றும் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் 400 வேலையிடங்களில் பாதுகாப்புச் சோதனை!