பேருந்தில் திடீரென ஏற்பட்ட புகை.. வெளியேற்றப்பட்ட பயணிகள்

Telok Blangah bus smoke
Stomp

தெலோக் பிளாங்காவில் SBS ட்ரான்ஸிட் பேருந்தில் திடீரென அதிக புகை வெளியானதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

கடந்த நவம்பர் 7 அன்று மதியம் 12.15 மணியளவில் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த புகைமூட்டம் அடங்கிய பேருந்தின் வீடியோவை Stomp வாசகர் பகிர்ந்துள்ளார்.

கால்கள் நொண்டியவாறும், கைத்தடிகள் உதவியுடனும் தீபாவளியை கொண்டாடிய வெளிநாட்டு ஊழியர்கள்

இதனால் பயணிகள் அனைவரும் கீழே இறங்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பேருந்து ஓட்டுநர் தனது பேருந்தின் பின்புறத்தில் இருந்து புகை வெளியேறுவதைக் கவனித்ததாக SBS ட்ரான்சிட் செய்தித் தொடர்பாளர் கிரேஸ் வு கூறினார்.

“பயணிகளின் பாதுகாப்பை கருதி, ஓட்டுநர் விரைவாக பேருந்தை நிறுத்தி, அதில் இருந்த பயணிகளை வெளியேற்றினார்.”

தீ ஏற்படவில்லை என்பதனாலும், மேலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதாலும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு (SCDF) தகவல் கொடுக்கப்படவில்லை.

“பின்னர் பேருந்து பணிமனைக்கு இழுத்து கொண்டு செல்லப்பட்டது, சம்பவத்திற்கான காரணத்தை விசாரித்து வருகிறோம்” என்றார் அவர்.

இதனால் ஏற்பட்ட சிரமத்திற்கு பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“என் தமிழ் மொழி திறன் அவர்களுக்கு உதவும்” – தீபாவளியை கொண்டாடாமல் லிட்டில் இந்தியாவில் ரோந்து பணியாற்றிய சிங்கப்பூர் காவல்துறை அதிகாரி