மரத்தின் மீது மோதிய SBS பேருந்து: 6 பேர் மருத்துவமனையில் அனுமதி – ஓட்டுநர் சஸ்பெண்ட்

Ben Chia Lor/FB & SG Road Vigilante/FB

TPE விரைவுச்சாலையில் SLE நோக்கிய வழியில், KPE (MCE) வெளியேறும் ஸ்லிப் சாலையில் உள்ள மரத்தின் மீது SBS டிரான்சிட் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவம் தொடர்பான புகைப்படம் SG Road Vigilanteடின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டது.

“குழந்தைகளை பிரிந்து வாடும் வெளிநாட்டு ஊழியர்கள்” – நானும் குழந்தை தான்.. அவர்களுக்கு பதில் அன்பளிப்பு வழங்குகிறேன்!

இந்த சம்பவம் குறித்து, டிசம்பர் 25ஆம் தேதி காலை 10:58 மணியளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

40 வயதான பேருந்து ஓட்டுநர் மற்றும் 27 முதல் 55 வயதுக்குட்பட்ட ஐந்து பயணிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தனர்.

SCDF தற்காப்பு படை சம்பவ இடத்திற்கு வந்தவுடன், பேருந்தின் ஓட்டுநர் இருக்கையில் ஒருவர் சிக்கியது கண்டுபிடிக்கப்பட்டு, அவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

“பேருந்து ஓட்டுநர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும், போலீஸ் விசாரணை நிலுவையில் உள்ளது” என்றும் SBS ட்ரான்சிட்டின் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸின் மூத்த துணைத் தலைவர் டம்மி டான் கூறினார்.

மெரினா பேயில் மிதந்த ஆடவர் சடலம் (வீடியோ) – என்ன நடந்தது..? போலீஸ் விசாரணை