சாங்கி விமான நிலைய கட்டமைப்பில் மோதிய SBS பேருந்து… மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதி

SG Road Vigilante/Facebook

SBS டிரான்ஸிட் பேருந்து சாங்கி விமான நிலையத்தில் உள்ள கட்டமைப்பில் இன்று (செப். 22) மோதியது.

SG Road Vigilante முகநூல் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட புகைப்படத்தின் அடிப்படையில், பேருந்து நேரடியாக Skytrain தண்டவாளத்தின் அடியில் உள்ள தூணில் மோதியது போல் தெரிகிறது.

“மனைவியை காணொளி எடுத்து மிரட்டி தவறான தொழிலுக்கு அழைத்த கொடூரம்” – சிங்கப்பூரில் பணிபுரிந்த கணவன் மீது புகார்

தங்கள் வளாகத்தில் விபத்து ஏற்பட்டதை சாங்கி விமான நிலையக் குழுவின் (CAG) செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.

Skytrain பாதையில் எந்த சேவைகளும் தற்போது இயங்கவில்லை என்றும், மேலும் அதன் உள்கட்டமைப்பில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை பொறியாளர்கள் மறுஆய்வு செய்வதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 1:10 மணியளவில் முனையம் 3 மற்றும் முனையம் 1க்கு இடையில் ஏற்பட்ட விபத்து குறித்து தகவல் கொடுக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) கூறியது.

பேருந்து ஓட்டுநர் இருக்கையில் ஒருவர் சிக்கியதாகவும், அவர் ஹைட்ராலிக் மீட்பு கருவிகளைப் பயன்படுத்தி மீட்கப்பட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், மூன்று பேர் சாங்கி பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

“சிங்கப்பூர், திருச்சி இடையே கூடுதல் விமானச் சேவை”- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவிப்பு!