திட்டம் போட்டு சுமார் S$27,000க்கும் மேல் மோசடி செய்த இருவர் கைது!

508 nabbed illegal moneylending and scams
Photo: Getty

தொடர் மின்னணு வணிக மோசடிகளில் ஈடுபட்டதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சிங்கப்பூர்க் காவல் படை செய்திக்குறிப்பில் தெரிவித்தது.

2022ஆம் ஆண்டு ஜனவரியில் இது பற்றி புகார் பதிவானது, இதனை அடுத்து 17 மற்றும் 25 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.

கத்தியுடன் போலீசாரை நோக்கி ஓடிவந்த ஆடவர்… சுட்டுப்பிடித்த போலீஸ் – திக் திக் வீடியோ!

இந்த மேசடியில் பாதிக்கப்பட்ட மூன்று பேரிடம் சுமார் S$27,000 பணத்தை 17 வயது ஆடவர் மோசடி செய்துள்ளார். அவர் போலியான பைகளை ஆடம்பர பைகளாக விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

மறுபுறம், 25 வயதான மற்றொரு ஆடவர், இருவரிடம் S$300 மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணைக்கு பின், போலீசார் அடையாளத்தை கண்டறிந்து, அவர்களை பிப்., 15ல் கைது செய்தனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரில் நாளை முதல் இவர்களுக்கெல்லாம் வழக்கமான பரிசோதனை இல்லை..!