அதிக அவசர அழைப்புகள், குறைவான தீ விபத்துகள்: SCDF ஆண்டு அறிக்கை!

PHOTO: SCDF/FACEBOOK

கடந்த ஆண்டு கோவிட்-19 நோய்த்தொற்று சூழலில் பாதிப்பு அதிகரித்த போது, ​​அதிகமான மக்களுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டது.

​​அப்போது அதிமான அவசர அழைப்புகளுக்கு துணை மருத்துவர்கள் பதிலளித்ததாக கூறப்பட்டுள்ளது.

பொடுபோக்கான மருத்துவத்தால் உயிரிழந்த தமிழக ஊழியர்: அலட்சியமாக செயல்பட்ட மருத்துவருக்கு அபராதம்!!!

கடந்த ஆண்டு மட்டும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படைக்கு (SCDF) சுமார் 213,615 அழைப்புகள் உதவி வேண்டி வந்தன.

இது 2020ஆம் ஆண்டில் பெற்ற 190,882 அழைப்புகளை விட 11.9 சதவீதம் அதிகமாகும் என்று இன்று (பிப் 11) வெளியிடப்பட்ட அதன் வருடாந்திர அறிக்கை தெரிவிக்கிறது.

குறிப்பாக செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில், சுமார் 63,000 அழைப்புகளை SCDF துணை மருத்துவர்கள் பெற்றனர்.

இந்த அழைப்புகள் முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட 36.5 சதவீதம் அதிகம் எனவும் குறிப்பிடபட்டுள்ளது.

அதே போல, அவசரமற்ற அழைப்புகளும் சற்று அதிகரித்துள்ளன, 2020ல் 8,835 என இருந்த அழைப்புகள் கடந்த ஆண்டு 9,050 என பதிவாகியுள்ளன.

போலி கோவிட் -19 தடுப்பூசி சான்றிதழ் விற்பனை… பொதுமக்கள், ஊழியர் என 25 பேர் கைது