VTL அல்லாத வழக்கமான விமானங்களை இயக்கும் “Scoot” – ‘கோவை, திருச்சி’ பயணிகளுக்கு நற்செய்தி

SIA, Scoot
Scoot

குறைந்த கட்டண விமான நிறுவனமான ஸ்கூட், இந்தியாவிற்கு புதிய விமானங்களை அறிவித்துள்ளது. இது அதன் பயணிகளுக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது.

இந்த விமானம் சிங்கப்பூரில் இருந்து மொத்தம் ஆறு இந்திய நகரங்களுக்கு செல்லும். இந்தியா-சிங்கப்பூர் இடையே டிசம்பர் இறுதி முதல் விமானங்களை இயக்க இது முடிவு செய்தது.

‘ஹே கத்தியை எடு’… என்று லிட்டில் இந்தியாவில் அடித்துக்கொண்ட வெளிநாட்டு ஊழியர்கள் 3 பேர் கைது

தற்போதைய சிறப்பு பயண ஏற்பாட்டின்கீழ் இந்த விமானங்கள் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விமானங்கள் “VTL ஒப்பந்த விமானங்கள் இல்லை” என்பதை, Scoot ஏற்கனவே பயண முகவர்கள் மற்றும் அதன் கூட்டாளர்களுக்கு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.

இந்த விமானங்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் எல்லாவித நுழைவு விதிகளையும் சிங்கப்பூர் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களையும் பின்பற்ற வேண்டும்.

இத படிங்க : இந்திய பயணிகளுக்கு ஜன. 8 முதல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எளிமையாக்கும் சிங்கப்பூர்

இது கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், அமிர்தசரஸ் மற்றும் ஹைதராபாத் போன்ற சில முக்கிய இந்திய நகரங்களை இணைக்கும் விமானமாகும்.

இவற்றில், கோயம்புத்தூர், திருவனந்தபுரம் மற்றும் விசாகப்பட்டினம் ஆகியவை புதிய விமான சேவை ஆகும்.

இனி வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே விமான சேவை – இந்திய மாநிலம் அதிரடி உத்தரவு