ஸ்கூட் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு!

"சென்னை, சிங்கப்பூர் இடையே விமான சேவை"- அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஸ்கூட் நிறுவனம்!
Photo: Flyscoot

 

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் (Singapore Airlines Group), கடந்த 2022-23 ஆம் நிதியாண்டில் ஈட்டிய வருவாய் மற்றும் லாபத்தில் சாதனை படைத்துள்ளது.

கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளும் அதிபர் ஹலிமா யாக்கோப்!

கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு பிறகு கடந்த 2022- ஆம் ஆண்டின் தொடக்கத்தில் எல்லை திறக்கப்பட்டது. அதன் பிறகு, விமான போக்குவரத்துத்துறை வழக்கமான நிலைக்கு திரும்பியது. இதன் காரணமாக, விமானத்தில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் உயர்ந்துள்ளது. இதனால் விமான நிறுவனங்கள் நஷ்டத்தில் இருந்து லாபத்திற்கு உயர்ந்தனர்.

அந்த வகையில், இந்த ஆண்டு மார்ச் 31- ல் முடிவடைந்த நிதியாண்டில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் சுமார் S$17.78 பில்லியன் வருவாயை ஈட்டி சாதனைப் படைத்துள்ளது. கடந்த 2021- 2022 ஆம் நிதியாண்டில் S$7.62 பில்லியன் ஆக இருந்த நிலையில், தற்போது சுமார் 133% அளவுக்கு வருவாய் உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்தின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில், கொரோனா காலத்தின் போது சம்பளம் குறைக்கப்பட்ட, நிறுவனத்திற்கு கடினமாக உழைத்த ஊழியர்களுக்கு சுமார் எட்டு மாத போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மலிவு விலை உணவுக் கடைகளைக் கண்டறிய பிரத்யேக இணையதளம் அறிமுகம்!

அதன் தொடர்ச்சியாக, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்திற்கு சொந்தமான மலிவுக் கட்டணத்தில் விமான சேவையை வழங்கி வரும் விமான நிறுவனமான ஸ்கூட் நிறுவனத்தில் (Flyscoot) பணிபுரியும் தகுதி வாய்ந்த ஊழியர்களுக்கு ஆறு மாத சம்பளத்தைப் போனஸாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.