மேலாடை, முகக்கவசம் இன்றி இரண்டு ஆண்கள் மதுவுடன் விமானத்தில் ‘பார்ட்டி’- விசாரணையைத் தொடங்கியது ஸ்கூட்!

Photo: TikTok

மலிவு விலை கட்டணத்தில் விமான சேவையை வழங்கி வரும் ஸ்கூட் நிறுவனத்தின் (Scoot Airlines) ஒரு விமானத்தில் நடந்த நிகழ்வு வீடியோவாக வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்!

அந்த வீடியோவில், ஸ்கூட் விமானத்தில் பயணித்த இரண்டு ஆண்கள் முகக்கவசம், மேல் ஆடையின்றியும் இருந்துள்ளனர். அத்துடன், அவர்கள் இசைக்கேற்ப நடனமாடியுள்ளனர். மது பார்ட்டி கொண்டாடும் வகையில் அவர்களின் செயல்பாடுகள் அமைந்தது. அவர்களுக்கு அருகில் இருந்த இருக்கையின் மேல் 10- க்கும் மேற்பட்ட சிறிய ரக மதுபாட்டில்களும் இடம்பெற்றுள்ளது. ஸ்கூட் விமானப் பணிப்பெண்ணின் சீருடை போன்ற தோற்றத்தில் ஒரு பெண், கையுறைகள், முகக்கவசம் அணிந்தவாறு வீடியோவில் இடம்பெற்றுள்ளார்.

அந்த இரண்டு நபர்களையும், தனது மூக்கின் மேல் விரல் வைத்து அமைதியாக இருக்குமாறு அந்தப் பெண் கேட்டுக் கொண்டார். சுமார் 15 வினாடிகள் கொண்ட வீடியோவில், மற்ற பயணிகள் யாரும் இடம் பெறவில்லை. இந்த வீடியோ டிக்டாக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட நிலையில், பின்னர், அதில் இருந்து அகற்றப்பட்டது.

சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சரைச் சந்தித்த இந்தோனேசிய விமானப் படையின் தலைமைத் தளபதி!

இருப்பினும், இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், துறை ரீதியான விசாரணை தொடங்கியுள்ளது ஸ்கூட் நிறுவனம்.