பயணிகளுக்கு தவறுதலான மின்னஞ்சல் – மன்னிப்பு கேட்ட ஸ்கூட் நிறுவனம்..!

SIA, Scoot
Scoot

தவறுதலாக மின்னஞ்சல்கள் அனுப்பியதற்காக ஸ்கூட் விமான நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

சிங்கப்பூரிலிருந்து குவாங்சோவுக்கு செல்ல விமானத்தில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய மின்னஞ்சலை தவறாக அனுப்பியதை தொடர்ந்து ஸ்கூட் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

இதையும் படிங்க : வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்களிடம் வேலைவாய்ப்புக்கான போட்டி பிளவுபடுத்தும் பிரச்சினை ஆகலாம் – அதிபர் ஹலிமா..!

புதிய COVID-19 தொற்று சூழலில் பயணத் தேவைகளை விவரிக்கும் அந்த மின்னஞ்சல், TR100 விமானத்தில் பயணிப்பவர்களுக்கானது என்றும், இது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட இருந்ததாகவும் ஸ்கூட் தெரிவித்துள்ளது.

இருப்பினும், விமானத்தில் முன்பதிவு செய்யப்படாத வாடிக்கையாளர்களுக்கு இது தவறாக அனுப்பப்பட்டதாக விமான நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

ஒரே மின்னஞ்சலின் பல பிரதிகள் அனுப்பப்பட்டதாக கூறப்பட்டுள்ளது, அதாவது ஒரு நபர் 30க்கும் மேற்பட்ட அறிவிப்புகளைப் பெற்றுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக ஸ்கூட் தெரிவித்துள்ளது.

மேலும் தங்களுடைய மிக உயர்ந்த முன்னுரிமை என்னவென்றால், தவறுகளை சரிசெய்வது ஆகும் என்றும் ஸ்கூட் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரிலிருந்து அடுத்த மாதம் முதல் தமிழகம் செல்லும் விமானங்களின் அட்டவணை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg