வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் சுய பரிசோதனை செய்வதற்கான முன்னோடித் திட்டம் தொடக்கம்.!

Self testing foreign workers
Pic: MOM

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் சிலவற்றில், மனிதவள அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ACE குழு கிருமித்தொற்றுக்கான சுய பரிசோதனையை மேற்கொள்ளும் முன்னோடித் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

இந்த முன்னோடித் திட்டம் தொடங்கப்படுவதற்கு முன், சுய பரிசோதனையை எவ்வாறு முறையாக மேற்கொள்ளுதல், அதன் முடிவை எப்படி பதிவு செய்தல் போன்றவை குறித்து, அதிகாரிகள் ஊழியர்களுக்கு கற்றுக்கொடுத்தனர், ஊழியர்கள் சிலருக்குக் கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் ரயில் நிலையங்கள் திறப்பு..வியாபாரம் அதிகரிக்கும் என கடைக்காரர்கள் நம்பிக்கை.!

தங்கும் விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களின் கூடுதல் பாதுகாப்பிற்காக
ART விரைவுப் பரிசோதனையும் தற்போது நடத்தப்படுகிறது.

தங்கும் விடுதிகளில் வசிப்போர் அவ்வப்போது ART எனும் Antigen விரைவுப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், தங்குமிடங்களில் உள்ள ஊழியர்கள் இரு வாரத்துக்கு ஒருமுறை PCR பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக வன்முறையை தூண்டும் விதமாக காணொளி வெளியிட்ட ஆடவர் – போலீஸ் விசாரணை