மிதக்கும் தங்குமிடங்களைக் உருவாக்க துணைபுரிந்தவர்களுக்கு நன்றி – மூத்த அமைச்சர் தியோ சீ ஹேங்..!

Senior Minister Theo Chee Hean has said that many of those affected by the disease are recovering well and are preparing their accommodation.
Senior Minister Theo Chee Hean has said that many of those affected by the disease are recovering well and are preparing their accommodation. (Photo: Facebook/Teo Chee Hean)

சிங்கப்பூர்: COVID -19-க்கு எதிரான எங்கள் போராட்டத்தில் நாங்கள் அடுத்த கட்டத்திற்கு செல்கிறோம். கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் நன்றாக குணமடைந்து வருகின்றனர். அவர்களுக்கு தங்குமிடங்கள் தயாராகி வருகின்றன என்று மூத்த அமைச்சர் தியோ சீ ஹேங் (Teo Chee Hean) தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

பாதுகாப்பான இடைவெளியை முறையாகக் கடைப்பிடிக்கும் வகையில் மிதக்கும் தங்குமிடங்களும், பெரிய கூடாரங்களும் அமைக்கப்பட்டுள்ளதாகக் அமைச்சர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: COVID -19: முகக்கவசம் கட்டாயம் – சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) அறிவிப்பு..!

தயார் நிலையில் இருக்கும் தங்குமிடங்களின் புகைப்படங்களையும் தியோ சீ ஹேங் (Teo Chee Hean) தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

We are going into the next phase of our battle against CoViD-19. Many of those who were tested +ve are now recovering…

Posted by Teo Chee Hean on Friday, May 8, 2020

இந்த மிதக்கும் தங்குமிடங்கள், பெரிய கூடாரங்கள் ஆகியவற்றை சில வாரங்களில் கட்டமைக்கவும், தயாரிக்கவும் பொது நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை அமைப்புகளும் அயராது உழைத்தனர்.

இந்த சவாலை சமாளிப்பதற்கு உதவிய பொது நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை அமைப்புகளும் தனது நன்றியை மூத்த அமைச்சர் தியோ சீ ஹேங் (Teo Chee Hean) தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் புதிதாக 876 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!