மூத்த தமிழ் பேராசிரியரைச் சந்தித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மூத்த தமிழ் பேராசிரியரைச் சந்தித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Photo: TN Govt

 

சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 25) காலை 10.00 மணிக்கு சிங்கப்பூர் வாழ் தமிழர், தமிழ் பேராசிரியர் சுப.திண்ணப்பன் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது, தமிழ் சமுதாயத்திற்கு ஆற்றிய சேவைகளைப் பாராட்டி முதலமைச்சர் சால்வை அணிவித்து, புத்தகம் வழங்கி சிறப்பித்தார்.

உள்துறை அமைச்சர் கா.சண்முகத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

தமிழ் பேராசிரியரான சுப.திண்ணப்பன், சிவகங்கை மாவட்டம் சேர்ந்தவர் ஆவார். இவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அதிராம்பட்டினம் கல்லூரி, மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் பல்கலைக்கழகங்களில் பணியாற்றியுள்ளார்.

Photo: TN Govt

இவர் ஆற்றிய தமிழ் சேவைக்கு பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களின் சார்பில் 20- க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் தமிழ் பயிற்றுவித்துள்ளார்.

“சிங்கப்பூரின் தந்தை லீ குவானுக்கு மன்னார்க்குடியில் நினைவுச் சின்னம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

இந்த சந்திப்பின் போது, தமிழாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. மற்றும் அரசு உயரதிகாரிகள் உடனிருந்தனர்.