சிராங்கூன் நார்த் பகுதியில் ஓடும் வாகனம் முன்பு வேண்டுமென்றே விழுந்த ஊழியர் (வீடியோ): கார் மோதியது போன்று மகா நடிப்பு

serangoon-north-pretend-hit-by-car

சிராங்கூன் நார்த் பகுதியில் ஓடும் வாகனம் ஒன்றின் முன் வேண்டுமென்றே கீழே விழுந்து கார் மோதியது போல நடித்த ஊழியர் ஒருவரின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கார் இடித்தது போல் ஆஸ்கர் விருது பெறும் அளவிற்கு நடித்து காட்டிய அவரின் வீடியோ சம்பந்தப்பட்ட காரின் டேஷ்போர்டு கேமராவில் சிக்கியது.

சிங்கப்பூரில் தடைசெய்யப்பட்ட பொருட்களை வைத்திருந்த 3,000க்கும் மேற்பட்டோர் கைது

இந்த வினோதமான சம்பவம் Complaint Singapore முகநூல் குழுவில் இன்று செப்.28 பகிரப்பட்டது.

சிராங்கூன் நார்த் அவென்யூ 5ல் சாலையோரம் ஆடவர் நிற்பதை அந்த வீடியோ தெளிவாகக் காட்டியது.

பின்னர் கார் நெருங்கியதும், அவர் காரின் முன் தரையில் விழுந்தார், கார் ஓட்டுநர் நல்வாய்ப்பாக பிரேக் அடித்து வாகனத்தை நிறுத்தினார்.

வீடியோ முடியும் வரை 20 வினாடிகள் அவர் தரையின் கீழே விழுந்து கிடப்பதை காண முடிகிறது. எதனால் அவ்வாறு செய்தார் என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை.

VIDEO: https://www.facebook.com/100034567905320/videos/480142714129580/

விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த ஊழியர்: கட்டுமான நிறுவனத்தில் பாதுகாப்பு இல்லை – செக் வைத்த MOM