20 ஆண்டுகளாக வெளிநாட்டு பணிப்பெண்கள் தான் இலக்கு.. மறைந்து இருந்து மான பங்கம் செய்யும் ஆடவர் – பிடிபட்ட கதை

Singapore Foreign maids groper 7 years' preventive detention
Pic: Ili Nadhirah Mansor/TODAY

சிங்கப்பூரில் கடந்த 20 ஆண்டுகளில், தனியாக இருந்த வெளிநாட்டு பணிப்பெண்களை குறிவைத்து தகாத செயல்களில் ஈடுபட்ட ஆடவருக்கு 7 வருட தடுப்பு காவல் விதிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது​​ பின்னால் வந்த ஆடவர் ஒருவர் பணிப்பெண்ணின் முன்பகுதியில் கையை வைத்ததாகவும், பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிச் சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு இனி சிரமம் இருக்காது.. சட்டவிரோத லாரி சேவைக்கு குட்பை

இந்நிலையில், தவறாக நடந்துகொண்ட குற்றத்தை கடந்த மாதம் ஒப்புக்கொண்ட 46 வயதான சூங் தோ மின் என்ற அந்த சிங்கப்பூரருக்கு கடந்த அக் 17 அன்று ஏழு ஆண்டுகள் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டது.

தனிமையில் இருக்கும் வெளிநாட்டு பணிப்பெண்களை இலக்காக கொண்டு இவர் அத்துமீரலில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

பணிப்பெண்களை மானபங்கம் செய்தது தொடர்பாக கடந்த காலத்தில் மட்டும் ஐந்து குற்றங்கள் அவர் மீது இருப்பதால், இந்தத் தண்டனை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

2003ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி, 2007, 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில், அதாவது 20 ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் குற்றத்தில் அவர் ஈடுபட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

அதோடு விடாமல், கடந்த ஜூன் 10 ஆம் தேதி காலை, டெலோக் பிளாங்கா ரைஸ் எஸ்டேட் பகுதியில் இந்தோனேசிய வீட்டுப் பணிப்பெண் தனது முதலாளியின் நாய்களுடன் நடந்து கொண்டிருந்தார்.

பின்னர் பணிப்பெண், பிளாக் ஒன்றின் கீழ்தளத்தில் அமர முடிவு செய்தார். அதனை அடுத்து அவர் தனது குடும்பத்தினருடன் கைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது, ​​அங்கு வந்த அந்த ஆடவர் பெண்ணின் மார்பின் வலது பக்கத்தைப் பிடித்தார் என சொல்லப்பட்டுள்ளது.

இதனை அடித்து அவர் அங்கிருந்து தப்பிச்சென்றார். பணிப்பெண் உதவி வேண்டி கத்தினார், ஆனால் அங்கு உதவ யாரும் இல்லை.

மனமுடைந்த பணிப்பெண் இரு நாட்களுக்கு பின், தன் பாதுகாப்பு கருதி முதலாளியிடம் இது பற்றி சொன்னார்.

பின்னர் அவரது முதலாளி போலீசில் புகார் செய்தார்.

லிட்டில் இந்தியாவிலுள்ள குடியிருப்பில் தீ.. 20 பேர் வெளியேற்றம் – ஒருவர் மருத்துவமனையில் அனுமதி