பான் தீவு அதிவிரைவு சாலையில் 7 கார்கள் மோதி கோர விபத்து; இருவர் மருத்துவமனையில் அனுமதி

pie accident
@charmeloenj/TikTok

பான் தீவு அதிவிரைவு சாலையில் (PIE) சுமார் 7 வாகனங்கள் மோதி மோசமான விபத்து ஏற்பட்டது.

நேற்று மே 31 அன்று இரவு 10:40 மணியளவில் பிடோக்கிற்கு அருகில் நடந்த அந்த விபத்தில் ஏழு கார்கள் மோதிக்கொண்டன.

பெண் ஒருவரை ஏமாற்றி பலே திட்டம்… தமிழக ஆடவர் மற்றும் அவரின் குடும்பத்தார் மீது வழக்கு பதிவு!

இந்த சம்பவத்தின் காட்சிகள் SG Road Vigilante மற்றும் Roads.sg ஆகிய Facebook பக்கங்கள் மற்றும் TikTok செயலி மூலமாகவும் வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டன.

அதிவிரைவு சாலையின் வலதுபுறம் உள்ள பாதையில் மொத்தம் ஏழு கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக காணப்பட்டன. அதில் ஒரு கார் வானத்தை நோக்கி நிற்பதையும் வீடியோ காட்சிகள் வழியே காண முடிகிறது.

இந்த விபத்து, Eunos மேம்பாலத்திற்கு அருகில் சாங்கி விமான நிலையத்தை நோக்கி செல்லும் வழியில் PIE அதிவிரைவு சாலையில் நடந்தது.

விபத்தை அடுத்து, இரண்டு பேர் சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மேலும் மூன்று பேருக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டதாகவும், அதனால் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் குடியிருப்புகளில் அதிக தொந்தரவு செய்யும் மூட்டை பூச்சிகளை ஒழிக்க எளிய வழிமுறைகள்..!