COVID-19: சிங்கப்பூரில் மேலும் 7 நோய் பரவல் குழுமங்கள் அடையாளம் – MOH..!

Seven new clusters reported - MOH
Seven new clusters reported - MOH (Photo: TODAY/Nuria Ling)

சிங்கப்பூரில் நேற்றைய (மே 6) நிலவரப்படி, புதிதாக 788 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அதாவது தற்போதுவரை, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 20,198ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : இதையும் படிங்க: சிங்கப்பூரில் அதிகாரிகளை அச்சுறுத்தியதற்காகவும், தவறாக பேசியதற்கும் ஒருவருக்கு 7 மாதங்கள் சிறை..!

புதிய சம்பவங்கள்

புதிய சம்பவங்களின், ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் 759 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 16 பேர் ஊழியர் தங்கும் விடுதிகளில் அல்லாது பிற இடங்களில் வசிக்கும் வேலை அனுமதி உடையோர்.

புதிய சம்பவங்களில் சமூக அளவில் 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11 சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் மற்றும் இரண்டு வேலை அனுமதி பெற்றவர்களும் அடங்குவர்.

புதிய குழுமங்கள்

மேலும் 7 நோய் பரவல் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக MOH தெரிவித்துள்ளது.

  • 20 Benoi Lane
  • 5 Fourth Chin Bee Road
  • 36 and 38 Kian Teck Drive
  • Tampines Street 62
  • 14 Tech Park Crescent
  • 50A Tuas Link 4
  • 35 Tuas View Walk 2

இறப்புகள்

COVID-19 தொற்று காரணமாக மேலும் இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் தற்போது வரை மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 20ஆக உள்ளது.

மேலும் படிக்க : COVID-19: சிங்கப்பூரில் மேலும் இருவர் உயிரிழப்பு – சுகாதார அமைச்சகம்..!