பாலியல் குற்றங்கள் மற்றும் குடும்ப வன்முறைகளில் ஈடுபட இனி பயப்படணும்.. சிங்கப்பூரில் ஸ்பெஷல் கம்மாண்ட்!

foreign workers wife target teacher arrested
Pixabay

பாலியல் குற்றங்கள் மற்றும் குடும்ப வன்முறைகளை தனிப்பட்ட முறையில் கையாள, இதுபோன்ற வழக்குகளை விசாரிப்பதில் சிறந்த நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகளால், புதிய “போலீஸ் கமாண்ட்” (Police command) அடுத்த ஆண்டு அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் பாலியல் குற்றங்கள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சிங்கப்பூர் காவல்துறையின் தொடர்ச்சியான முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும்.

MRT ரயிலில் பெண்ணிடம் தவறாக நடந்து, தன் பிறப்புறுப்பை காட்டிய வெளிநாட்டு ஊழியருக்கு சிறை, அபராதம்

இதுபோன்ற வழக்குகளைக் கையாள்வதில் காவல்துறை அதிகாரிகளுக்கு வழக்கமான பயிற்சி வழங்கப்படும்.

இந்த ஆண்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்களின் கணக்கெடுப்பு ஆகியவையும் அடங்கும்.

இது போன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் பராமரிப்பு நடவடிக்கைகள் பற்றிய கருத்துக்களை வழங்குவதற்கும், முன்னேற்றத்திற்கான பகுதிகளை அடையாளம் காண்பதற்கும் தன்னார்வ அடிப்படையில் ஈடுபடுவார்கள்.

அதே போல, SG Her Empowerment Limited அல்லது SHE எனப்படும் புதிய சமூகம் தொண்டு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது, இது பெண்களைப் பாதிக்கும் விவகாரங்களை தீர்க்க இந்த மாதம் தொடங்கப்பட்டது.

மேலும், பாலியல் குற்றங்கள் குறித்து தகவல் வழங்கும் வகையில் ஆன்லைன் ஆதரவு மையம் அமைக்கப்படும்.

இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 12) காவல்துறை நடத்திய பாலியல் வன்கொடுமை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கில் சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் இந்த திட்டங்கள் குறித்து அறிவித்தார்.

கருவில் இருக்கும் தன் பிள்ளைக்காக அதிக நேரம் வேலை செய்த ஊழியர்… தன் குழந்தையை பார்க்காமலே சென்ற சோகம் – கண்ணீரில் குடும்பம்