மானபங்கப்படுத்தியதாக வெளிநாட்டவர்கள் உட்பட 10 பேர் மீது குற்றச்சாட்டு

Photo: Getty

இந்த மாதம் 5ம் தேதியன்று பெண் நோயாளியை மானபங்கப்படுத்தியதாக சந்தேகிக்கப்பட்டு சிங்கப்பூரரான சூவா கீ லோய் (வயது 70) மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயர் தடை உத்தரவின் காரணமாக வெளியிடவில்லை.

COVID-19: சிங்கப்பூரில் நேற்று ஒரே நாளில் மூன்று பேர் மரணம்.!

குடும்பத்தாரை மானபங்கப்படுத்தியதாக மற்றொரு இடத்தில் இரு ஆடவர்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் மற்றொருவர் தன் சக ஊழியரையே பல முறை மானபங்கபடுத்தியதாகச் சந்தேகம் கொள்ளப்படுகிறது.

இந்த 3 பேரும் 45 வயது முதல் 63 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் பெயரும் தடை உத்தரவின் காரணமாக வெளியிடவில்லை.

மேலும், 19 வயது 33 வயதுக்கும் உட்பட்டவர்களான, சிங்கப்பூரர்கள் முகமது சியமீர், முகமது ஷமுதி, அங் செங் வெய், மலேசியர்களான லாய்சி சுவான், ஷந்த்ரு முத்துசாமி, இந்தியாவின் ராஜேந்திரன் சுரேஷ் மேனன் ஆகியாேர் மீதும் மானபங்கக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

மானபங்கக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட 10வது நபர் குர்ஜித் சிங் (வயது 35). இச்சம்பவங்கள் அனைத்தும் 2016ம் ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை நடந்த மானபங்க சம்பவங்கள் என்று கருதப்படுகின்றன.

14 வயதுக்கு உட்பட்டவரை மானபங்கப்படுத்தியது நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு அதிகப்பட்சமாக 5 ஆண்டு சிறைத் தண்டனையும், மற்றவர்களுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும் அல்லது அபராதம் அல்லது பிரம்படி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று விதிக்கப்படலாம்.

மேலும் 50 வயதைத் தாண்டிய குற்றவாளிகளுக்கு பிரம்படி காெடுக்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.

விபச்சாரம் தொடர்பான குற்றங்களுக்காக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆடவருக்கு 16 மாத சிறை