சிங்கப்பூர் பட்ஜெட் 2024- ல் வெளியான அதிரடி அறிவிப்புகள்!

சிங்கப்பூர் பட்ஜெட் 2024- ல் வெளியான அதிரடி அறிவிப்புகள்!
Photo: Singapore’s Deputy Prime Minister, Minister for Finance Lawrence Wong

 

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் இன்று (பிப்.16) பிற்பகல் 03.30 மணிக்கு 2024- ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை சிங்கப்பூரின் துணை பிரதமரும், நிதியமைச்சருமான் லாரன்ஸ் வோங் தாக்கல் செய்து உரையாற்றினார். சிங்கப்பூர் பட்ஜெட் 2024- ல் (Singapore Budget 2024) வெளியான அதிரடி அறிவிப்புகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

Budget 2024: வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள் இதை செய்தாக வேண்டும்

சிங்கப்பூரில் வசிக்கும் 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூரர்களுக்கு வாழ்க்கைச் செலவுக்காக நடப்பாண்டில் 200 வெள்ளி முதல் 400 வெள்ளி வரை பணம் வழங்கப்படும். வருமானம் 1,00,000 வெள்ளிக்கு குறைவாகவும், ஒரு சொத்து மட்டுமே கொண்டவர்கள், மேற்கண்ட தொகையைப் பெற தகுதியுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரர் குடும்பங்களுக்கு கூடுதலாக 600 வெள்ளி மதிப்பிலான சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகள் (Community Development Council Vouchers- ‘CDC’) வழங்கப்படும். சுமார் 1.4 மில்லியன் சிங்கப்பூரர் குடும்பங்கள் பற்றுச்சீட்டுகளைப் பெறுவார்கள். இந்த பற்றுச்சீட்டுகள் இரண்டு கட்டங்களாக வழங்கப்படும். 300 வெள்ளி பற்றுச்சீட்டுகள் நடப்பாண்டில் ஜூன் மாதம் இறுதிக்குள் வழங்கப்படும். மீதமுள்ள 300 வெள்ளி பற்றுச்சீட்டுகள் 2025- ஆம் ஆண்டு ஜனவரியில் வழங்கப்படும்.

‘விடுமுறை நாட்களில் இந்தியர்கள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணம் செல்வது அதிகரிப்பு’- காரணம் என்ன தெரியுமா?

இந்த பற்றுச்சீட்டுகளை பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்திப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.