ஷுவில் மறைத்து வைத்து தங்கம் கடத்தல்…சிங்கப்பூரில் இருந்து வந்த பயணியை மடக்கிப் பிடித்த சுங்கத்துறை அதிகாரிகள்!

ஷுவில் மறைத்து வைத்து தங்கம் கடத்தல்...சிங்கப்பூரில் இருந்து வந்த பயணியை மடக்கிப் பிடித்த சுங்கத்துறை அதிகாரிகள்!
Photo: Trichy Customs (Preventive) Commissionerate

 

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு (Trichy International Airport) வரும் வெளிநாட்டு பயணிகள் தங்கத்தைக் கடத்தி வருவது நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில், திருச்சி மண்டல சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறையின் வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.

உணவு உண்ணும்போது திடீரென மயங்கி விழுந்த ஊழியர்.. மருத்துவமனையில் சேர்ப்பு

அந்த வகையில், பிப்ரவரி 13- ஆம் தேதி அன்று இண்டிகோ ஏர்லைன்ஸ் (Indigo Airlines) நிறுவனத்தின் 6E1008 என்ற விமானம், பயணிகளுடன் சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்திறங்கியது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் (Central Intelligence Unit- ‘CIU’) தீவிரமாக சோதனை நடத்தினர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றுக் கொண்டிருந்த ஆண் பயணியை தனியே அழைத்துச் சென்ற அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

அவர் அணிந்திருந்த ஷுவை பார்த்து சந்தேகமடைந்த அதிகாரிகள், ஷுவைப் பிரித்து பார்த்து பசை வடிவிலான தங்கம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், கடத்தி வரப்பட்ட சுமார் 797.500 கிராம் தங்கத்தைப் பறிமுதல் அதிகாரிகள், அந்த பயணியைக் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெளிநாட்டு பிரச்சனை தொடர்பில் சிங்கப்பூரில் பேரணி, முழக்கம் – போலீஸ் விசாரணை

இது குறித்து திருச்சி சுங்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், “ஷூவில் (shoes) மறைத்து வைத்து கடத்திக் கொண்டு வரப்பட்ட 24 கேரட் தூய தங்கத்தின் எடை 797.500 கிராம் என்றும், அதன் மதிப்பு சுமார் ரூபாய் 50.08 லட்சம்” என்றும் தெரிவித்துள்ளனர்.