உணவு உண்ணும்போது திடீரென மயங்கி விழுந்த ஊழியர்.. மருத்துவமனையில் சேர்ப்பு

Worker collapsing Bus Interchange
Stomp

சோவா சூ காங் பேருந்து முனையத்தில் திடீரென மயங்கி விழுந்த ஊழியர் ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கடந்த பிப்.6 அன்று இரவு 8.35 மணியளவில் ஏற்பட்ட இந்த சம்பவத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஸ்டாம்ப் வாசகர் பகிர்ந்துள்ளார்.

சிங்கப்பூரை விட சிறந்த வேலை, குறைந்த வாழ்க்கைச் செலவுகள்.. ஆஸ்திரேலியாவுக்கு படையெடுக்கும் இந்திய, சிங்கப்பூர் மக்கள்

ஊழியர் உடல்நிலை சரியில்லாமல் மயங்கி சரிந்து கீழே விழுந்ததாக வாசகர் கூறினார்.

இதனை அடுத்து, அந்த பெண் ஊழியர் ஸ்ட்ரெச்சரில் வைத்து ஆம்புலன்சில் கொண்டுச் செல்லப்படுவதையும் படத்தில் காணலாம்.

அன்று இரவு 8 மணியளவில் உணவு சாப்பிட்டு கொண்டிருக்கும்போது அவர் திடீரென சரிந்து தரையில் மயங்கி விழுந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

அன்று இரவு 8.20 மணியளவில் 70 Choa Chu Kang Loop இல் இருந்து உதவி வேண்டி அழைப்பு வந்ததாகவும், பின்னர் அவர் Ng Teng Fong பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் SCDF கூறியது.

சிங்கப்பூருக்கு வரும் அனைத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கும் இனி “தானியங்கு பாதைகள்” – முன்பதிவு, பாஸ்போர்ட்டை தேவையில்லை