அண்டை நாடுகளுக்கும் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கவுள்ள சிங்கப்பூர்

(photo: mothership)

நீண்ட காலமாக சிங்கப்பூரில் இருக்கும் குறுகிய கால அனுமதி வைத்திருப்போருக்கு விரைவில் தேசிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் கோவிட் -19 தடுப்பூசி போடப்படவுள்ளது.

தகுதியுள்ளவர்களுக்கு ஆகஸ்ட் 18 முதல் குறுஞ்செய்தி மூலம் படிப்படியாக இதுபற்றி அறிவிக்கப்படும்.

மேலும் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்தது.

ஊழியர்கள் அதிகளவில் கிடைக்காததால், ஆசிய கட்டுமானத் துறையில் சிங்கப்பூர் 4வது இடம்

அந்த அனுமதி அட்டை பெற்றவர் இதற்கு தகுதிபெற எவ்வளவு காலம் நாட்டில் தங்கியிருக்க வேண்டும் என்பது பற்றி MOH குறிப்பிடவில்லை.

சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகள் மற்றும் நீண்ட கால அனுமதி பெற்றவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருப்பதால், தடுப்பூசி திட்டம் குறுகிய கால அனுமதி வைத்திருப்போருக்கும் துவங்கப்படுகிறது என MOH கூறியுள்ளது.

அண்டை நாடுகளுக்கு தேவையான தடுப்பூசிகளை நன்கொடையாக சிங்கப்பூர் வழங்கவிருப்பதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விதிகளை மீறிய கடல்துறை நிறுவனங்களின் உரிமம் பறிமுதல் – தனி நபர்களுக்கு அபராதம்