COVID-19 பயணக் கட்டுப்பாடு: SIA விமானச் சேவை ரத்து ஜூன் வரை நீட்டிப்பு..!

SIA extends flight cancellations to June amid COVID-19 travel restrictions
SIA extends flight cancellations to June amid COVID-19 travel restrictions

COVID-19 தாக்கம் காரணமாக உலகளாவிய பயணக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) தனது விமான சேவை ரத்துசெய்தலை வரும் ஜூன் மாதம் வரை நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது.

SIA ஆரம்பத்தில் கூறியதாவது, மார்ச் மாத இறுதியில் SIA மற்றும் சில்க் ஏர் ஒருங்கிணைந்த பயணிகள் சேவையை ஏப்ரல் இறுதி வரை 96 சதவீதம் குறைக்கும் என்று கூறியிருந்தது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மொத்தம் 1,002 பேர் COVID-19 தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர் – MOH..!

அதன் இணையதள புதிய அறிவிப்பில், SIA மற்றும் சில்க் ஏர் ஆகியவை COVID-19 பரவலுக்கு மத்தியில் ரத்தை நீட்டிப்பதாக குறிப்பிட்டுள்ளது.

விமானங்கள் ரத்து செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள், தங்களின் டிக்கெட்டின் முழு மதிப்பை விமான வரவுகளாக வைத்திருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர்கள் மறு முன்பதிவு செய்யும் போது போனஸ் விமான வரவுகளும் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்திடம் சுமார் 200 விமானங்கள் உள்ளன. அவற்றில் 10 மட்டுமே தற்போது சேவையில் உள்ளது.

இதையும் படிங்க : COVID-19: தங்கும் விடுதிகளில் வசிக்கும் வேலை அனுமதி உடையோர் 597 பேர் பாதிப்பு..!