COVID-19: தங்கும் விடுதிகளில் வசிக்கும் வேலை அனுமதி உடையோர் 597 பேர் பாதிப்பு..!

Singapore reports 618 new cases of COVID-19; new cluster at Northpoint City
Singapore reports 618 new cases of COVID-19; new cluster at Northpoint City

சிங்கப்பூரில் நேற்றைய (ஏப்ரல் 25) நிலவரப்படி, புதிதாக 618 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அதாவது தற்போதுவரை, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 12,693ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு சுமார் 300,000 பராமரிப்புப் பைகளை வழங்க உள்ளது P&G…!

புதிய சம்பவங்கள்

புதிய சம்பவங்களின், ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வேலை அனுமதி உடையோர் 597 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 12 பேர் ஊழியர் தங்கும் விடுதிகளில் அல்லாது பிற இடங்களில் வசிக்கும் வேலை அனுமதி உடையோர்.

சமூகத்தில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 9 என்று MOH குறிப்பிட்டுள்ளது. இதில் 7 பேர் சிங்கப்பூர்வாசிகள் அல்லது நிரந்தரவாசிகள், 2 பேர் வேலை அனுமதி அல்லது நீண்ட கால வருகை அனுமதி உடையோர்.

புதிதாகக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டோரில் 81 சதவீதம், முன்னர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட குழுமங்களுடன் தொடர்புடையவர்கள். எஞ்சியோர், தொடர்புகள் கண்டறியும் பணி நிலுவையில் உள்ளது.

புதிய குழுமங்கள்

சிங்கப்பூரில் மேலும் புதிதாக 7 குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

  • யீஷூனில் உள்ள நார்த்பாய்ண்ட் சிட்டி (Northpoint City) ஷாப்பிங் மால்
  • 21 Defu South Street 1
  • 5 Jalan Papan-இல் உள்ள ASPRI-Westlite Papan
  • 30 Kian Teck Avenue-இல் Kian Teck Lodge
  • Tuas South Boulevard-இல் உள்ள SCM Tuas Lodge (80 T),
  • 8 Martin Place-இல் உள்ள கட்டுமானத் தளம்
  • 107 West Coast Vale-இல் உள்ள கட்டுமானத் தளம்

இதையும் படிங்க : இந்திய வெளிநாட்டு ஊழியர்களை பற்றி ட்விட்டரில் மோசமான கருத்து – காவல்துறை விசாரணை..!