இந்திய வெளிநாட்டு ஊழியர்களை பற்றி ட்விட்டரில் மோசமான கருத்து – காவல்துறை விசாரணை..!

Man under investigation for offensive comments posted on Twitter against Indian migrant workers
Man under investigation for offensive comments posted on Twitter against Indian migrant workers

சிங்கப்பூரில் 34 வயதான ஆடவர் ஒருவர், வெவ்வேறு இனக்குழுக்களிடையே பகைமையை ஏற்படுத்தும் விதத்தில் கருத்துகளைப் பதிவிட்ட காரணத்தினால் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது என்று சனிக்கிழமை (ஏப்ரல் 25) செய்தி வெளியீட்டில் காவல்துறை தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில் பணிபுரியும் இந்திய வெளிநாட்டு ஊழியர்களுக்கு எதிராக, ட்விட்டரில் பயனர் ஒருவர் வெளியிட்ட அந்த கருத்து தொடர்பான புகார் கடந்த ஏப்ரல் 18 அன்று தங்களுக்கு கிடைத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : முடி திருத்தம் அவசியமாகத் தேவைப்படுவோருக்கு முடி திருத்தும் கலைஞரின் அறிவுரை..!

சனிக்கிழமை நிலவரப்படி, அவரின் ட்விட்டர் கணக்கு அகற்றப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சி.சி.டி.வி மற்றும் காவல்துறை கேமராக்களின் படங்களின் உதவியுடன் பெடோக் காவல் பிரிவு அதிகாரிகள் வியாழக்கிழமை இந்த நபரின் அடையாளத்தை கண்டுபிடித்தனர்.

முதற்கட்ட விசாரணையில், ட்வீட் சம்பந்தப்பட்ட மற்றொரு இரண்டு வழக்குகளில் அந்த நபருக்கு தொடர்பு உள்ளது என்றும் நம்பப்படுகிறது, என்று காவல்துறை தெரிவித்துள்ளனர்.

மேலும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை மற்றும் / அல்லது அபராதம் விதிக்கப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வெளிநாட்டு ஊழியர்களுக்கு இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் வெளியிட்ட காணொளி..!