முடி திருத்தம் அவசியமாகத் தேவைப்படுவோருக்கு முடி திருத்தும் கலைஞரின் அறிவுரை..!

Advice for Haircut
Advice for Haircut

முடி திருத்தம் அவசியமாகத் தேவைப்பட்டால், அதை வீட்டில் மேற்கொள்ளவும் என்று முடி திருத்தம் செய்யும் கலைஞர் சிவா குரு அறிவுரை கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் நோய்ப்பரவலை முறியடிக்கும் அதிரடித் திட்டம் நடப்பில் இருப்பதால் முடி திருத்தும் கடைகள் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க : வெளிநாட்டு ஊழியர்களுக்கு இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் வெளியிட்ட காணொளி..!

வார இறுதியில் முடி திருத்தம் செய்ய பலர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் திடீர் அறிவிப்பால் பலரும் என்ன செய்வதென்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கலாம்.

முடி திருத்தம் அவசியமாகத் தேவைப்படுவோருக்குத் திரு. சிவா கூறும் அறிவுரைகள்…

  • முடி திருத்தம் செய்ய வேண்டுமானால் வீட்டில் உள்ள மற்றொருவரின் உதவியை நாடுங்கள். சுயமாக முடியை வெட்டவேண்டாம்.
  • முடியை ஒரே அடியாகக் குறைத்து வெட்டவேண்டாம். முடியை வெட்டும்போது நிதானமாகவும் மெதுவாகவும் செயல்படவேண்டும்.
  • எந்த அளவில் முடி வேண்டும் என்பதை முடிவுசெய்த பிறகு வெட்டுவது நல்லது. அளவுகோல் வைத்து முடியின் அளவைப் பார்த்தபிறகு திருத்தவும்.
  • காதுகளுக்கு மேலுள்ள பகுதியில் முடி திருத்தம் செய்யும்போது முதலில் டிரிம்மர் கருவியில் 4-ஆம் அளவைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பிறகு அளவு 3-க்குச் செல்லவும். அளவு சரியாக உள்ளது என்று நினைத்தால் அதோடு நிறுத்திக்கொள்ளவும்.
  • புதுவிதமாக முடிவெட்ட முயற்சி செய்யாதீர்கள்.

கட்டுப்பாட்டுகள் தளர்த்தப்பட்ட பிறகு முடி திருத்தம் செய்பவர்களை அணுகலாம். அதுவரை பொறுமை காக்கும்படி திரு. சிவா கேட்டுக்கொண்டார்.

Source : Seithi

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 618 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!