சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், Scoot விமானங்கள் ரத்து – SIA அறிவிப்பின் பின்னணி என்ன?

SIA, Scoot
Scoot

சிங்கப்பூர் ஏர்லைன்ஸும் (SIA) அதன் பட்ஜெட் நிறுவனமான ஸ்கூட் (Scoot) ஆகியவை குறிப்பிட்ட இடத்துக்கு மட்டும் விமான சேவையை ரத்து செய்துள்ளன.

தைவானைச் சுற்றி சீன இராணுவம் மேற்கொள்ளும் நேரடி துப்பாக்கிச் சூடு பயிற்சிகளுக்கு மத்தியில் வான்வெளி கட்டுப்பாடுகள் இருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

இதன் காரணமாக தைவானுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து இங்கு வரும் விமானங்களை ரத்து செய்துள்ளதாக SIA வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 5) தெரிவித்துள்ளது.

உரிமம் இல்லாமல் பணக்கடன்….கடனாளிகளுக்கு துன்புறுத்தல்; 107 பேரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சிங்கப்பூர் போலீஸ்

இன்று வெள்ளிக்கிழமை (ஆக. 05) திட்டமிடப்பட்ட SQ878 மற்றும் SQ879 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக SIA தெரிவித்துள்ளது.

SQ878 சிங்கப்பூரில் இருந்து தைபேக்கும், SQ879 தைபேயிலிருந்து சிங்கப்பூருக்கும் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

பயங்கர சாலை விபத்தில் உயிரிழந்த ஆடவர்; நேரில் கண்டவர்களிடம் வீடியோ ஆதாரம் தேடும் உறவினர்கள்