சிங்கப்பூர் ஓபன் பட்டத்தை வென்றார் பி.வி.சிந்து!

Photo: High Commission Of India In Singapore Official Facebook Page

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

சிலிண்டர் வாங்க போனவருக்கு ரூ.79 லட்சம் “ஜாக்பாட்”!

சிங்கப்பூரில் நடைபெற்ற ஓபன் பேட்மிண்டன் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் ஜப்பான் வீராங்கனை சயனா கவாகாமியை எதிர்கொண்டார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே அதிரடி காட்டிய பி.வி.சிந்து 21-15, 21-7 என்ற நேர் செட் கணக்கில் சயனா கவாகாமியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

அதைத் தொடர்ந்து, நேற்று (17/07/2022) நடைபெற்ற இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை வாங்க் ஷி யியை எதிர்கொண்ட இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, அவரை 21-9, 11-21, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். சாய்னா நேவால், சாய் பிரனீத்தை தொடர்ந்து பி.வி.சிந்து சிங்கப்பூர் ஓபன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். சிங்கப்பூர் ஓபன் பட்டத்தை பி.வி.சிந்து வென்றது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பாசிர் ரிஸ் பார்ம்வேயில் மூடப்படும் மீன் பண்ணை… S$20,000க்கு பதில் S$2,500 – அனைத்தும் தள்ளுபடி விலையில்!

சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகம் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.