சிங்கப்பூரில் மேலும் 1,101 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி!

Photo: TODAYonline

சிங்கப்பூரில் கொரோனா தினசரி பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (02/12/2021) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், “சிங்கப்பூரில் நேற்று (02/12/2021) மதியம் நிலவரப்படி, மேலும் 1,101 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் அளவில் 1,091 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில், சமூக அளவில் 1,050 பேருக்கும், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 41 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 10 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,67,150 ஆக உயர்ந்துள்ளது.

‘VTL’ சிறப்பு பயணத் திட்டத்தின் கீழ் இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் பயணிகளின் கவனத்திற்கு!

கொரோனா பாதிப்பால் மேலும் 9 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் 56 முதல் 99 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 735 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 991 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் 194 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், 69 ஐ.சி.யூ.வில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஐ.சி.யூ. சிகிச்சைப் பெற்று வருபவர்களின் சிலரின் உடல்நிலைக் கவலைக்கிடமான நிலையில்
உள்ளது.

வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூர் வந்த இருவருக்கு “ஓமிக்ரான்” கோவிட்-19 தொற்று – முதற்கட்டப் பரிசோதனை

கடந்த நாளில் 2,056 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் 332 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர்.” இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.