சிங்கப்பூரில் மேலும் 370 கொரோனா நோய்த்தொற்று உறுதி!

MOH revamps coronavirus reports
Pic: Ooi Boon Keong/TODAY

சிங்கப்பூரில் நேற்று (12/12/2021) மதியம் 12.00 மணி நிலவரப்படி, மேலும் 370 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் அளவில் 359 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் சமூக அளவில் 355 பேருக்கும், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 4 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்த வந்த பயணிகள் 11 பேருக்கும் நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,73,362 ஆக உயர்ந்துள்ளது.

காதலியுடன் உறவில் இருந்த காணொளியை அவரின் உறவினருக்கு பகிர்ந்த வெளிநாட்டவருக்கு சிறை

கொரோனா பாதிப்பால் சிகிச்சைப் பலனின்றி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 794 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக 592 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் 104 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், 33 பேர் ஐ.சி.யூ.வில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் 3 பேரின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

சிங்கப்பூரில் 9 புதிய கடைகளைத் திறக்கும் ‘Foodpanda’ நிறுவனம்!

கொரோனா நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்த 830 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.