சிங்கப்பூரில் வாரத்தில் 4 நாள் வேலை… எங்களுக்கு இந்த முறை வேண்டும் ஊழியர்கள் ஆர்வம் – பின்வாங்கும் நிறுவனங்கள்

racist-passenger-india-Singapore
Pic: Raj Nadarajan/TODAY

சிங்கப்பூரில் வேலை செய்யும் ஊழியர்கள் அதிகமானோர் வாரத்தில் நான்கு நாள் வேலை வேண்டும் என கட்டுக்கடங்கா ஆசையுடன் உள்ளனர்.

1,000 ஊழியர்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பு ஆய்வில், சுமார் 81 சதவீத ஊழியர்கள் வாரத்தில் நான்கு நாள் வேலை வேண்டும் என கருத்து கூறியுள்ளனர்.

தீபாவளியை முன்னிட்டு பொதுமக்களுக்காக திறக்கப்படும் இஸ்தானா – கட்டண விவரம்

அந்த 81 சதவீதத்தில் 37 சதவீத ஊழியர்கள் பிடிவாதமாக அந்த வேலை முறை தான் வேண்டும் என சொல்லாமல் கூறியுள்ளனர்

இந்த 4 நாள் வேலையை விரும்பும் ஊழியர்களில் 78 சதவீதம் பேர் வேலை மற்றும் வாழ்க்கை என்ற சமநிலையை முக்கியமாக கருதுகின்றனர்.

சிங்கப்பூரில் 1 சதவீதத்திற்கும் குறைவான நிறுவனங்கள் மட்டுமே தற்போது இந்த வாரத்துக்கு 4 நாள் வேலை முறையை வழங்குவதாக Job Street தளம் வெளிக்காட்டுகிறது.

இதில் 55 சதவீத ஊழியர்கள் இந்த அணுகுமுறை நிறுவனங்கள் ஏற்காது என்றும், 10 சதவீத நபர்கள் மட்டுமே நிறுவனங்கள் ஏற்கும் என கூறியுள்ளனர்.

குறிப்பாக அனைத்து வகை வர்த்தக நிறுவனங்களுக்கும் இது ஏற்புடையது அல்ல என்று 35 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர்.

பொறுத்து இருந்து பார்ப்போம் சிங்கப்பூர் அரசாங்கம் எடுக்கும் முடிவே இறுதி முடிவாக இருக்கும்.

வேலையில் இருந்த ஊழியர் சுப்ரமணியை கடுமையாக தாக்கிய ஓட்டுநர் – போலீஸ் விசாரணை