வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ஜோகனஸ்பர்க் விமான நிலையத்தில் தரையிறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்!

Photo: Singapore Airlines Official Facebook Page

மார்ச் 14- ஆம் தேதி அன்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு (Singapore Airlines) சொந்தமான SQ478 என்ற எண் கொண்ட விமானம், 58 பயணிகள் மற்றும் 15 விமான பணிப்பெண்களுடன் சிங்கப்பூரில் இருந்து தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகருக்கு (Cape Town) சென்றுக் கொண்டிருந்தது.

ஹவ்காங் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து….130 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்!

இந்த நிலையில், விமானத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, விமானம் ஜோகனஸ்பர்க்கில் உள்ள ஓஆர் டம்போ சர்வதேச விமான நிலையத்தில் (OR Tambo International Airport) தரையிறக்கப்பட்டது.

பின்னர் விமானத்தில் இருந்த பயணிகள், விமான பணிப்பெண்கள் உள்பட அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அதைத் தொடர்ந்து, விமானம் முழுவதும் தீவிர சோதனை செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, மதியம் 12.37 PM மணிக்கு ஜோகனஸ்பர்க்கில் இருந்து புறப்பட்ட விமானம், 02.29 PM மணிக்கு கேப் டவுன் நகரைச் சென்றடைந்தது.

பகுதி நேரமாக வீட்டைச் சுத்தம் செய்யும் ஊழியர்களின் கவனத்திற்கு….சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

திட்டமிட்ட நேரத்தை விட ஐந்து மணி நேரம் தாமதமாக விமானம் கேப் டவுன் நகரைச் சென்றடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.