சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு முதல் காலாண்டில் S$1.12 பில்லியன் நட்டம்..!

Singapore Airlines reports S$1.12 billion net loss in Q1
Singapore Airlines reports S$1.12 billion net loss in Q1 (Photo: REUTERS)

சிங்கப்பூரில் நோய்த்தொற்று சூழலில் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக பயணிகளின் சேவை குறைந்ததை தொடர்ந்து, முதல் காலாண்டில் S$1.12 பில்லியன் நிகர இழப்பை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) அறிவித்துள்ளது.

ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலகட்டத்தில் அந்நிறுவனத்தின் நிகர லாபம் S$111 மில்லியன் என்று பதிவுசெய்யப்பட்டது.

இதையும் படிங்க : வேலைகளின் மீது COVID-19 ஏற்படுத்திய தாக்கம் அடுத்த 6 மாதத்தில் தெரியவரும்: தொழிலாளர் இயக்கம்..!

ஒட்டுமொத்த பயணிகள் சேவை 99.5 சதவீதமும், இதில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்கு 99.4 சதவீதமும், சில்க் ஏருக்கு 99.8 சதவீதமும், ஸ்கூட்-ற்கு 99.9 சதவீதமும் நட்டம் ஏற்பட்டுள்ளது.

கிருமி பரவுவதைக் கட்டுப்படுத்த உலகெங்கிலும் பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் எல்லைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் விமானப் பயணத்திற்கான தேவை குறைந்ததாக நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், சர்வதேச விமான சேவையானது, எதிர்பார்ப்பை காட்டிலும் மெதுவாகவே மீண்டும் தொடங்கும் என்று கருதுவதாக SIA குறிப்பிட்டுள்ளது.

விமானப் பயணிகளின் எண்ணிக்கையானது கிருமித்தொற்றுக்கு முந்தைய சூழலை எட்ட, 2 முதல் 4 ஆண்டு ஆகலாம் என்றும் SIA தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இரண்டாம் காலாண்டில் ஆட்குறைப்பு அதிகரிப்பு – வேலையின்மை கடந்த பத்தாண்டு காணாத அளவு உயர்வு ..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg