வேலைகளின் மீது COVID-19 ஏற்படுத்திய தாக்கம் அடுத்த 6 மாதத்தில் தெரியவரும்: தொழிலாளர் இயக்கம்..!

singapore jobs
(Photo: Economic Times)

சிங்கப்பூரில் COVID-19 கிருமித்தொற்று காரணமாக பல்வேறு வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டு மீண்டும் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன.

இது ஒரு புறம் இருக்கும் பட்சத்தில், கிருமித்தொற்று பரவல் வேலைகளின் மீது ஏற்படுத்திய பாதிப்பானது, அடுத்த 6 மாத காலத்தில் தெரியவரும் என்று தொழிலாளர் இயக்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, ஆட்குறைப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பிறந்த குழந்தையை குப்பைத்தொட்டியில் கைவிட்டதாக வெளிநாட்டுப் பெண் கைது..!

சிங்கப்பூரின் வேலையின்மை விகிதம் இந்த இரண்டாவது காலாண்டில், கடந்த பத்தாண்டு காணாத அளவு உயர்ந்துள்ளது. அதாவது இந்த விகிதம் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் 2.9% உயர்ந்துள்ளது.

இதுவரையில், ஆட்குறைப்பு செய்த நிறுவனங்கள் நியாயமாகவும் நடந்துகொண்டதாக சிங்கப்பூர்த் தேசிய முதலாளிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் COVID-19 தொற்றுநோய் காரணமாக சேவைகள் மற்றும் கட்டுமானத் துறையில் வேலைவாய்ப்பு பின்னடைவை சந்தித்தது.

தற்போது பண நெருக்கடியை சந்தித்துள்ள நிறுவனங்கள் அரசாங்கத்திடம் உதவி கோரலாம். மேலும், ஆட்குறைப்பில் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு வேறு நிறுவனங்களில் வேலை தேடித்தரவும் முதலாளிகள் முயற்சி செய்யலாம் என்று சம்மேளனம் தெரிவித்துள்ளது.

மனிதவள அமைச்சகம் (MOM) வெளியிட்ட முதற்கட்ட தகவல்களின்படி, வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களைத் தவிர, இங்குள்ள ஊழியர்களின் எண்ணிக்கை இரண்டாவது காலாண்டில் 121,800ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இரண்டாம் காலாண்டில் ஆட்குறைப்பு அதிகரிப்பு – வேலையின்மை கடந்த பத்தாண்டு காணாத அளவு உயர்வு ..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg