சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பணப்புழக்கத்தை அதிகரிக்க 1 பில்லியன் டாலர் கூடுதலாக திரட்டியுள்ளது..!

sia-increase-flights-2024
(Photo: Singapore Airlines)

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) திங்களன்று (ஜூன் 8), சுமார் US$1 பில்லியன் டாலர் கடன் வசதிகளைப் பெற்றுள்ளது.

இது சமீபத்தில் rights issue என்னும் முறையில் இருந்து S$8.8 பில்லியன் திரட்டியது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சென்று வந்த பட்டியலில் முஸ்தஃபா சென்டர் உள்ளிட்ட இடங்கள் சேர்ப்பு..!

COVID-19 தொற்றுநோயில் இருந்து மீள்வதற்கு இது உதவும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட பயணத் தடைகள் காரணமாக உலகளாவிய விமான நிறுவனங்கள் பெரும் அடியை சந்தித்தன.

உலகளாவிய சுகாதார நெருக்கடிக்கு மத்தியில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மிகப்பெரிய தொகையை திரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தனது ஏர்பஸ் A350-900 மற்றும் போயிங் 787-10 விமானங்களில் நீண்ட கால கடன்கள் மூலம் S$900 மில்லியன் திரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

நிச்சயமற்ற இந்த காலகட்டத்தில், தேவையான அளவு பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்கான கூடுதல் வழிகளை SIA தொடர்ந்து ஆராயும் என்று அந்நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதில் Rights Issue முறை என்பது அதன் பங்குதாரர்கள் கூடுதல் பங்குகளைக் குறைந்த விலையில் பெற வாய்ப்பளிக்கும் முறை ஆகும்.

இதையும் படிங்க : சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்களின் பிறந்தநாள் விழாவில் கலந்துக்கொண்ட அமைச்சர் லாம் ..!