சாங்கி விமான நிலையத்தில் பயணிகளின் கைப்பெட்டிகளை சோதிக்க AI செயற்கை நுண்ணறிவு முறை – சோதனை

Singapore Airport Tests AI for Baggage Security
Changi Airport Group

Singapore Airport Tests AI for Baggage Security: AI எனப்படும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி பயணிகளின் பாதுகாப்பு சோதனை நேரத்தை குறைக்க முடியுமா என்பதை சாங்கி விமான நிலையம் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.

அதன் ஒருபகுதியாக, AI மற்றும் X-ray படங்களை தரும் இயந்திரத்தையும் பயன்படுத்தி கைப்பெட்டிகளை செக்-இன் சோதனை செய்யும் முறையை சாங்கி விமான நிலையம் சோதனை செய்து வருகிறது.

சிங்கப்பூரில் இந்தியருக்கு சிறை.. சாதாரண வாக்குவாதம் மரணத்தில் முடிந்த விபரீதம்

இதனால் விமான நிலைய அதிகாரிகளின் செயலாக்க நேரம் குறையும் என்றும், மனித பிழையின் சாத்தியக்கூறுகளையும் அது குறைக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

இதுவரை, சிகரெட் லைட்டர்கள் அல்லது கூர்மையான பொருள்கள் போன்ற சில தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கண்டறிய AI அமைப்பு பயன்படுத்தப்படுகிறது.

மேம்பட்ட சோதனை முறை வந்தால், செக்-இன் நேரங்களை பாதியாக குறைக்கலாம் என்று விமான நிலையம் நம்புவதாக தனது அறிக்கையில் கூறுகிறது.

இந்த சோதனை முறை வெற்றி அடைந்துள்ளதாகவும், இந்த செயற்கை நுண்ணறிவு முறை மனித செயல்பாடுகளை விட நன்றாக செயல்படுவதாகவும் அது கூறியுள்ளது.

சாங்கி விமான நிலையத்தில் இனி பாஸ்போர்ட் கிடையாது.. 2024 முதல் “டோக்கன்” தான்

இந்திய பணிப்பெண்ணுக்கு சொந்த ஊரில் வீடு கட்டிக்கொடுத்த சிங்கப்பூர் முதலாளி – “பணிப்பெண் கிடைத்தது எங்கள் பாக்கியம்” என புகழாரம்