Work Permit வைத்துள்ளவர்கள் உட்பட 400க்கும் மேற்பட்டோருக்கு சிங்கப்பூர் நுழைய அனுமதி!

increased-screenings-enhancement-measure changi airport
Pic: AFP

ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளை சேர்ந்த 500 பயணிகளுக்கு VTL பயணப் பாதை திட்டத்தின் கீழ் சிங்கப்பூருக்கு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட நாடுகளிலிருந்து சிங்கப்பூர் வருபவர்களில் 90 சதவீதம் பேர் சுற்றுப்பயணிகள் ஆவார்கள், அவர்களில் மீதமுள்ளவர்கள் மட்டுமே Work permit உடையவர்கள்.

செம்ம அறிவிப்பு! கட்டுப்பாடுகளை எளிதாக்கி வெளிநாட்டினருக்கு கிரீன் சிங்னல் கொடுத்த நாடு!

பிப்ரவரி 25ம் தேதிக்கும், மே மாதம் 6ம் தேதிக்கும் இடைப்பட்ட நாட்களில் அவர்கள் சிங்கப்பூர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

VTL திட்டத்தின் கீழ், அனுமதி பெறுவதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் முதல் நாளிலேயே ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஹாங்காங் ஆகிய நான்கு நாடுகளை சேர்ந்த 476 பேருக்கு சிங்கப்பூர் வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளுடான VTL பயணம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஓமிக்ரான் தொற்று பரவல் அச்சம் காரணமாக அத்திட்டம் கைவிடப்பட்டது. கிருமித்தொற்று சூழலுக்கு ஏற்ப சிங்கப்பூர் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.

அட! இப்படியும் மோசடி கும்பல் செயல்படுமா… போலீசிடம் எப்படி தகவல் தெரிவிப்பது? – வாங்க தெரிஞ்சிப்போம்!