“சிங்கப்பூர், கொல்கத்தா வழித்தடத்தில் A350-900 விமானம் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும்”- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

Photo: Singapore Airlines Official Facebook Page

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் (Singapore Airlines Group) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்தியாவின் கொல்கத்தா, சிங்கப்பூர் வழித்தடத்தில் ஏர்பஸ் A350- 900 என்ற ரக விமானம் (A350-900 medium-haul wide-body aircraft) மீண்டும் அறிமுகப்படுத்தப்படும். சிங்கப்பூரில் இருந்து கொல்கத்தாவுக்கு வழங்கப்படும் விமான சேவையில் இந்த விமானம் பயன்படுத்தப்படும். அதன்படி, வாரத்தில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை ஆகிய மூன்று நாட்கள் மட்டும் சிங்கப்பூரில் இருந்து கொல்கத்தாவுக்கு ஏர்பஸ் A350- 900 விமானம் பயன்படுத்தப்படும்.

Cross Island Line ரயில் பாதையின் முதற்கட்ட கட்டுமான பணிகள் இனிதே தொடக்கம்

வரும் மார்ச் 26- ஆம் தேதி முதல் இந்த விமானம், விமான சேவையை வழங்கவிருக்கிறது. இது முழுக்க முழுக்க நேரடி விமான சேவை ஆகும். மற்ற நாட்களில், கொல்கத்தா, சிங்கப்பூர் இடையே வழங்கப்படும் தினசரி சேவைகளில் போயிங் 737- 8 மேக்ஸ் (Boeing 737-8 MAX) என்ற விமானங்கள் பயன்படுத்தப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

A350- 900 ரக விமானத்தின் சிறப்பம்சங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்தின் A350- 900 ரக விமானம், அதிக இருக்கைகளைக் கொண்டது. மற்ற விமானங்களைக் காட்டிலும், சரக்குகளை வைப்பதற்கு அதிக இடம் உள்ளது. இதனால் சரக்குகளை அதிகளவு ஏற்றிச் செல்லலாம்.

அரசுமுறைப் பயணமாக புரூணை சென்றுள்ள சிங்கப்பூர் துணை பிரதமர் லாரன்ஸ் வோங்!

விமானத்தில் அதிவேக வைஃபை வசதி உள்ளது. பயணிகளுக்கு தேவையான பொழுதுப்போக்கு வசதிகளும் உள்ளது. அதன்படி, ஆன்லைன் கேம்ஸ், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவையைக் கண்டுகளிக்கலாம். இந்த விமானம் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது.