அரசுமுறைப் பயணமாக புரூணை சென்றுள்ள சிங்கப்பூர் துணை பிரதமர் லாரன்ஸ் வோங்!

lawrence wong says about foreign workers
PHOTO: MINISTRY OF COMMUNICATIONS AND INFORMATION

சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் இன்று (18/01/2023) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சிங்கப்பூர் துணை பிரதமரும், நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று (18/01/2023) அரசுமுறைப் பயணமாக, புரூணைக்கு சென்றுள்ளார். துணைப் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக புரூணைக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

பாரம்பரிய பட்டு வேஷ்டி, சட்டை அணிந்து பொங்கலைக் கொண்டாடிய சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர்!

ஜனவரி 19- ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள சிங்கப்பூர் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், புரூணை சுல்தான் ஹசனல் போல்கியா (His Majesty Sultan Haji Hassanal Bolkiah Mu’izzaddin Waddaulah), புரூணை பட்டத்து இளவரசர், புரூணை நாட்டின் நிதித்துறை மற்றும் பொருளாதார அமைச்சர், புரூணை பிரதமர் அலுவலக அமைச்சர் உள்ளிட்டோரைத் தனித்தனியே நேரில் சந்தித்து இருதரப்பு உறவு குறித்துப் பேசவிருக்கிறார்.

Cross Island Line ரயில் பாதையின் முதற்கட்ட கட்டுமான பணிகள் இனிதே தொடக்கம்

சிங்கப்பூர் துணைப் பிரதமருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள், நிதித்துறை மற்றும் தகவல், தொடர்புத்துறை அமைச்சகங்களின் அதிகாரிகள் ஆகியோரும் புரூணைக்கு சென்றுள்ளனர்”. இவ்வாறு சிங்கப்பூர் பிரதமர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.