சிங்கப்பூரில் ஆப்பிள் சாதனங்கள் பயன்படுத்துவோரின் கவனத்திற்கு

Apple's iPhone 15 S’pore prices: S$1,299-S$2,639

ஆப்பிள் பயனர்களுக்கு சிங்கப்பூர் இணைய அவசர உதவிக்குழு (SingCERT) ஆலோசனை வழங்கியுள்ளது.

தங்கள் சாதனங்களை சமீபத்திய மென்பொருளுடன் உடனடியாக அப்டேட் செய்துகொள்ள அறிவுறுத்தப்படுவதாக SingCERT இன்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 1) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் இருந்து கோவை: கடத்தல் நடவடிக்கை.. பெட்டியை போட்டுவிட்டு எஸ்கேப் – சிங்கப்பூர் அதிகாரிகள் விசாரணை

அதன் சில தயாரிப்புகளை பாதிக்கும் பழைய இரண்டு அம்சங்கள் குறித்து SingCERT அதன் இணையதளத்தில் புதுப்பிப்பில் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட தயாரிப்புகளை பாதிக்கும் சில பாதுகாப்பு அம்சங்களை ஆப்பிள் நிறுவனம் அப்டேட் செய்துள்ளது.

பயனர்கள் பின்வரும் தயாரிப்புகளை சமீபத்திய அம்சங்களுடன் (versions) உடனடியாக அப்டேட் செய்ய அது அறிவுறுத்தியது:

  • iPhone XS மற்றும் அதற்குப் பிறகு வந்தவை
  • iPad Pro 12.9-inch 2வது generation மற்றும் அதற்குப் பிறகு வந்தவை
  • iPad Pro 10.5-inch, iPad Pro 11-inch 1st generation மற்றும் அதற்குப் பிறகு வந்தவை
  • iPad Air 3வது generation மற்றும் அதற்குப் பிறகு வந்தவை
  • iPad 6வது generation மற்றும் அதற்குப் பிறகு வந்தவை
  • iPad mini 5வது generation மற்றும் அதற்குப் பிறகு வந்தவை
  • MacOS Monterey, Ventura, Sonoma இயங்கும் Macs

பயனர்கள் தங்கள் சாதனங்களில் settings செயல்பாட்டின் கீழ் உள்ள தானியங்கி மென்பொருள் அப்டேட் (automatic software updates) செய்யவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இந்தியர்களுக்கு விசா தேவையில்லை.. சிங்கப்பூரில் இருந்து மலேசியா செல்லும் இந்தியர்களுக்கு விசா தேவையா?